மன அசைபோடும் பழக்கம் (Rumination)

மாடுகள் அசைபோடுவதை பார்க்கிறோம்.மாடு உணவை அசை போடுகிறது. மனிதனும் அசைபோடுகிறான் . ஆனால் உணவை அல்ல. கனவுகளை, கவலைகளை, பிரட்சினைகளை, என்று எப்போதும் அசைபோட்டுக்கொண்டிருக்கிறான்.
ஆனால் இந்த மனிதனின் அசைபோடுதல்பற்றி இப்போது பார்ப்போம். ஆங்கிலத்தில் “Ruminationஎன்பார்கள்.
Rumination என்றால் என்னவென்று பார்ப்போம். உங்கள் மனது எப்போதும் ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப நினைத்துக்கொண்டிருப்பதுதான் Rumination . அது தானாக திரும்ப திரும்ப வேறு விஷயங்கள் சிந்திக்க முடியாத அளவுக்கு ஒருவரை ஆக்ரமிக்கும் நிலை. சினிமாவில் ஒரு காமெடி நிகழ்வு வரும். குளிக்கும்போது என் நினைவு வரக்கூடாதென்று கதாநாயகன் சொல்வான். ஆனால் கதாநாயகிக்கு குளிக்கும்போது அந்த அவன் முகம்தான் வந்துபோகும்.அதுபோல் எந்த விஷயத்தை நினைக்ககூடாது என்று நினைக்கிறோமோ,அந்த நினைவுகள் மறக்கமுடியாமல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
அப்படி தொடர்ச்சியாக வரும் சிந்தனை தொடர்களால், கவலையும். மன அழுத்தமும் , அமைதியின்மையும் ஏற்படும் நிலையைத்தான் Rumination என்று அழைக்கப்படுகிறது.
இந்த Rumination ஒரு பழக்கமே(Habit). இந்த பழக்கம் அபாயகரமான முடிவுகளுக்கு கொண்டுபோய்விடலாம்.மனநலத்திற்கு மிகவும் கேடாகமுடியும், மன அழுத்தத்தை தொடரச்செய்வதோடு, வேகப்படுத்தவும் செய்யலாம். மேலும் யோசிக்கும் திறனையும், உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறனையும் செயலிழக்க செய்யலாம். தனிமைபட்டுவிட்டதாக உணர்வீர்கள் ,கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களிடமிருந்து உங்களை விலகிச்செல்ல வைத்துவிடும்.

சரி Rumination என்னும் மன அசைபோடும்பழக்கம், ஏன் ஏற்படுகிறது ?
மக்கள் பலவித காரணங்களால் இந்த பழக்கம் எற்படுகின்றது. அவற்றில் பொதுவான காரணங்கள் .
1)       இந்த மன அசைபோடும்பழக்கத்தால் பிரட்சினைகளின் ஆழம்வரை சென்று தீர்வு காணமுடியும்  என்று நினைக்கிறார்கள்.
2)      கடந்த காலத்தில் மனம்,உடல் பாதிக்ககூடிய நிகழ்வுகள் ,அல்லது விபத்துக்கள் நேர்ந்திருக்கலாம்.
3)      தீவிரமான,கட்டுப்படுத்த முடியாத மனஅழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடப்பில் இருக்கலாம்.
4)      சில குறிப்பிட்ட ஆளுமை குணம் கொண்ட சிலருக்கு ,இந்த மன அசைபோடும் பழக்கம் (Rumination) பொதுவானது. எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பவர்கள்(Perfectionists),நரம்பு தளர்ச்சி உடையவர்கள் (Neurotic), ஒருவர்மேல் அபரிமிதமான அன்பை ,உரிமையை கட்டுக்கடங்காமல் செலுத்துபவர்கள்(Possessiveness).  போன்ற ஆளுமை உடையவர்கள் இதில் அடங்குவர்
5)      சிலருடைய உறவுகளை அதிகமாக மதிப்பீடு செய்து,அவர்கள் மதிக்காத போதும் ,அவர்களுக்காக பெரிய தியாகத்தை செய்து அவர்களின் நட்பை உறவை தொடரநினைப்பவர்கள் போன்றவர்களும் இந்த பழக்கம் உடையவர்களாக இருப்பர்,

மன அசைபோடும் பழக்கம் தோன்றினால் எப்படி எதிர்கொள்ளவேண்டும் ?
இந்த பழக்க சுழற்ச்சி ஏற்பட்டவுடன் அதை நிறுத்த முயற்சிப்பதுதான் முதல்வேலை. நிறுத்துவதென்பது மிகவும் கடினமானது. அந்நாள் எவ்வளவு சீக்கிரம் நிருத்தமுடியுமோ அவ்வளவு நல்லது ,ஏனெனில் ஒரு பந்து மேட்டிலிருந்து உருளும்போது ஆரம்பத்தில் அதன் வேகம் குறைவாக இருக்கும். கீழே வர வர அதன் வேகம் அதிகரிக்கும் .அதுபோல் இந்த பழக்கமும் நாளாக நாளாக வேகம் அதிகரித்து நிறுத்துவது கடினமாகிவிடும் .

சரி.இந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு என்ன செய்யலாம்?
இதோ சில ஆலோசனைகள். மன அசைபோடும் பழக்கம் (Rumination)வந்தவர்களுக்கு கீழ்க்கண்ட 10 ஆலோசனைகள் பயனளிக்கும்.
1)      கவனத்தை திருப்புதல். இந்த பழக்கம் ஆரம்பித்ததாக உணர்ந்ததும்,சுற்றுமுற்றும் உற்று பாருங்கள் ,உடன்  என்னத்தை திசைதிருப்ப முயற்சியுங்கள் . இதில் வேறு உடன்பாடு வேண்டாம்.பிறகு
தொலைபேசியில் ,ஒரு நண்பரை, அல்லது ஒரு உறவினரை அழைத்து பேசலாம்  .
வீட்டு வேலைகளை கவனிக்கலாம் .
ஒரு திரைப்படம் பார்க்கலாம்.
ஒரு ஓவியம் வரையலாம்.
புத்தகம் படிக்கலாம்
தெருவில் சுற்றிவரலாம்
பாட்டுகேட்கலாம் .

2)      பிரட்சினையை தீர்க்க திட்டமிடல்.
எதிர்மறையான எண்ணங்களை தொடர்ந்து எண்ணுவதை விட்டுவிட்டு, அந்த பிரட்சினையை எதிர்கொள்வதற்கான திட்டத்தை உண்டாக்குவது.
அதற்கான வரைவு திட்டத்தை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். காலவரையரையோடு ,தெளிவாக , படிப்படியாக ,உங்கள் சக்திக்கு உட்பட்டபடி, நடக்ககூடிய அளவுக்கு தயாரியுங்கள்.
இப்படி திட்டமிடுவது உங்கள் மன அசைபோடும் பழக்கத்திலிருந்து ,திசை திருப்புவது மட்டுமின்றி உங்களை நிரந்தரமாக எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகச்செய்து தீர்வை நோக்கி முன்னெடுத்து செல்லும்.
3)      செயல் படுத்துங்கள்.
திட்டமிட்டபின். அதன் படி செயல்பட துவங்குங்கள். ஒவ்வொருபடியாக சிறு சிறு அடியாக எடுத்து வையுங்கள். ஒரு படி முடிந்ததும் அடுத்த படியை கூடுதல் முயற்சியோடு உங்கள் மனம் அமைதி கொள்ளும்வரை தொடருங்கள்
4)      உங்கள் எண்ணங்களை கேள்வி கேளுங்கள்.
நாம் பெரிய தவறை செய்துவிட்டோம் என்று என்னும்போதும்,நடந்துவிட்ட பெரிய விபத்துக்கு தான்தான் காரணம் என்று உணரும்போதும் நாம் அடிக்கடி மன அசைபோடுதலுக்கு ஆளாகிறோம்.
நடந்த அந்த தவற்றையோ, நிகழ்வையோ காட்சியாக மனதில் நினைவில் கொண்டுவருவதன்மூலம், எதிர்மறையான அந்த என்ன சங்கிலி துல்லியமானதோ,சரியானதோ அல்ல என்பதை உணரமுடியும் .அதன்மூலம் அந்த எதிர்மறை என்னச்சங்கிலியிளிருந்து விடுபடமுடியும் .

5)      உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களை மாற்றி அமையுங்கள்.
பூரனத்துவத்துடன் ,குறைகள் இல்லாத , மற்றும்  செய்யமுடியாத இலக்குகள் நம்மை எதிர்மறை என்னச்சங்கிளிக்கு இட்டுச்செல்லும் .
உங்கள் குறிக்கோள் லட்சியங்களை கேள்விகேளுங்கள்.அவற்றை ஏன்,எதற்காக அடைய முடியவில்லை என்று கேளுங்கள்.மேலும் அதற்காக  நீங்கள் என்ன முயன்றீர்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

அதிகம் எய்தக்கூடிய நம்பிக்கை கொண்ட இலக்குகள் அமைத்துக்கொள்வதன் மூலம் அபரிமிதமான எதிர்மறை என்னச்சுழலிருந்து விடுபட முடியும்.
6)      உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்.

உங்களிடமுள்ள திறமைகளை மேம்படுத்துங்கள். அதன்மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிக்கப்படும். மனநல சிகிச்சை மற்றும் பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளமுடியும்.
தன்னம்பிக்கை வளர்ந்துவிட்டால் இந்த எதிர்மறை என்னத்தொடர் சங்கிலி அறுந்துவிடும் .

7)      மன அமைதிகொள்வதற்கான பயிற்சிகளை செய்யுங்கள். மனதளர்த்தல் பயிற்சி (Relaxation),மூச்சுப்பயிற்ச்சி , யோகா, தியானம் ஏதாவது ஒன்றை தினம் செய்வதை பழக்கமாக கொள்ளவேண்டும்.
மேற்சொன்ன எல்லாவற்றின் செயல்பாடுகளும் அறிவியல் பார்வையில் ஒரே அடிப்படைதான்.
அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப இம்முறைகளை தேர்ந்தெடுக்கலாம் .

8)      நீங்கள் மன அசைபோடும் பழக்கம் (Rumination)ஏற்படுவதற்கான உந்தும் விசை எது என்று கண்டுபிடியுங்கள் .
உங்களை இந்த சுழலுக்குள் தள்ளும் போது  உள்ள நிகழ்வுகளை கவனியுங்கள். இது எந்த சூழ்நிலையில் ,எந்த இடத்தில் ,எந்த நேரத்தில் , சூழலில் இருக்கும் நபர்கள் ,என்று எல்லாவற்றையும் அவதானியுங்கள். குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
இது இந்த பழக்கத்திர்கான காரணியை தவிர்க்கவும்.நல்லமுறையில் பிரட்சினையை கையாளவும் உதவும்.
9)       நண்பரோடு பேசுங்கள்.
 மன அசைபோடும் பழக்கம் (Rumination) உங்களை தனிமை படுத்தும் .சமூகத்திலிருந்து ஒதுங்கச்செய்துவிடும் . நண்பர்கள் குடும்பத்துனருடன் நேரம் செலவிடுங்கள் .மனம்விட்டு பேசக்கூடிய நண்பரிடம் உங்கள் பிரட்சினையை சொல்லுங்கள் . அந்த நண்பர் உங்களைபோல் இந்த பழக்கம் உடையவராக இருந்துவிடக்கூடாது. உங்களுடைய பிரட்சினையை வெளியிலிருந்து பார்த்து, பரந்த புறப்பார்வையை தரக்கூடியவாரக இருப்பார்.

10)   இறுதியாக உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது அவசியம் . நன்கு தூங்குவது.இரவு அதிகநேரம் விழித்திருப்பதை தவிர்த்தல் , வீட்டிலும் வெளியிலும் கலகலப்பாக பழகுதல் போன்றவை வாழ்க்கையை இனிமையாக்கும் .
எப்போதும் ஒரு ஆதரவு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் .அதில் உங்கள் நண்பர்கள்,குடும்ப உறுப்பினர்கள் ,தேவைப்பட்டால் மனநல ஆலோசகர் இருக்கலாம். அவர்கள் ஆலோசனைகளும் உதவியும் நல்லபலனைத்தரும்.

Comments

Popular posts from this blog

Happiness is no longer a Noun, but Verb.-Happiness 2

Happiness our Choice

Vertigo & Dizziness