
மன அசைபோடும் பழக்கம் ( Rumination) மாடுகள் அசைபோடுவதை பார்க்கிறோம்.மாடு உணவை அசை போடுகிறது. மனிதனும் அசைபோடுகிறான் . ஆனால் உணவை அல்ல. கனவுகளை, கவலைகளை, பிரட்சினைகளை, என்று எப்போதும் அசைபோட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் இந்த மனிதனின் அசைபோடுதல்பற்றி இப்போது பார்ப்போம். ஆங்கிலத்தில் “ R umination ” என்பார்கள். R umination என்றால் என்னவென்று பார்ப்போம். உங்கள் மனது எப்போதும் ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப நினைத்துக்கொண்டிருப்பதுதான் R umination . அது தானாக திரும்ப திரும்ப வேறு விஷயங்கள் சிந்திக்க முடியாத அளவுக்கு ஒருவரை ஆக்ரமிக்கும் நிலை. சினிமாவில் ஒரு காமெடி நிகழ்வு வரும். குளிக்கும்போது என் நினைவு வரக்கூடாதென்று கதாநாயகன் சொல்வான். ஆனால் கதாநாயகிக்கு குளிக்கும்போது அந்த அவன் முகம்தான் வந்துபோகும்.அதுபோல் எந்த விஷயத்தை நினைக்ககூடாது என்று நினைக்கிறோமோ,அந்த நினைவுகள் மறக்கமுடியாமல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அப்படி தொடர்ச்சியாக வரும் சிந்தனை தொடர்களால், கவலையும். மன அழுத்தமும் , அமைதியின்மையும...